Wednesday, April 02, 2008

429. திபெத் - சீன அராஜகமும், இந்திய கோழைத்தனமும்

உலகத்தின் கூரை என்று அழைக்கப்படும் திபெத்தில் சீனக் கம்யூனிஸ்டுகள், அமைதியைப் போற்றும் புத்த பிட்சுக்கள் மற்றும் திபெத்திய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் அநியாய வன்முறை குறித்து பல செய்திகள் வந்துள்ளன. சீனாவின் இந்த அராஜக, ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து உலகெங்கும் உள்ள திபெத்திய அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பியன் யூனியனில் உள்ள அரசியல் தலைவர்கள் சீனாவின் போக்கை கண்டித்துள்ளனர். அக்டோபர் 1950-இல் சீனா திபெத்தை ஆக்ரமித்தபோது, அமெரிக்காவுக்கு திபெத் மீது ஆர்வமில்லை, ஆனால் இப்போதோ, சீனா ஒரு பொருளாதார வல்லரசாக இருப்பதோடு, அமெரிக்காவின் economic interests-ம் சேர்ந்து விடுவதால், தலாய் லாமாவுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு அமெரிக்கா சீனாவை மென்மையாகவே கேட்டுக் கொண்டுள்ளது !!!

(அடிமைத்தளையின் வலியை நன்கு அனுபவித்து, போராடி சுதந்திரம் பெற்ற) ஜனநாயக இந்தியாவோ, சீனக் கம்யூனிஸ்ட்களுக்கு பயந்து கொண்டு (நமக்கு எதிராக சீனர்களால் ஒரு எழவும் செய்ய முடியாது என்றபோதிலும்!) கவைக்குதவாத பேச்சு பேசிக் கொண்டு, சீனர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறது, மகா கேவலம் ! இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் முன்பு திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை முன்வைத்து, சீன அரசு சீனாவில் உள்ள நமது இந்திய வெளியுறவுத் தூதருக்கு நடுஇரவில் சம்மன் அனுப்பி, அவரை வரவழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தது.

நடு இரவில் சீனர்கள் அழைத்தால், நமது தூதர் பதறி அடித்துக் கொண்டு ஓட வேண்டுமா என்ன ? 'காலையில் சந்திக்கிறேன்' என்று கூட கூற முடியாமல் அப்படி என்ன ஒரு பேடித்தனம், வெட்கங்கெட்டத்தனம் ? இது போல சுயமரியாதை இல்லாமல் இயங்கும் நாமெல்லாம் 'இந்திய இறையாண்மை' பற்றிப் பேசினால், அதை விட வெட்கக்கேடு வேறு ஏதாவது உண்டா ??? இந்தியா இவ்வளவு வாலாட்டியும், திபெத்தில் அமைதி நிலவுகிறது என்று (டிராமா போட்டு) காட்டுவதற்காக சீன அரசு அழைத்த பிறநாட்டுப் பிரதிநிதிகள் குழுவில் இந்தியாவுக்கு இடம் வழங்கப்படவில்லை, இதை விடக் கேவலம் வேறு ஏதாவது உண்டா ?

சீன அரசாங்கத்துக்கு ஒரு பெரிய பயம் உண்டு. 1989-இல், திபெத்தில் தொடங்கிய போராட்டம், சீன மாணவர்களுக்கு உத்வேகத்தை தந்து, அவர்கள் கம்யூனிஸ்ட் அரசின் அடக்குமுறைக்கு எதிராக டியனமேன் ஸ்கொயரில் தொடர்ந்து 6-7 வாரங்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இறுதியில் சீன அரசு, ராணுவத்தின் துணையோடு, டாங்குகளை தனது மக்கள் மேலேயே ஏவி, பலரை கொடூரமாக பலி கொண்டு, அதே நேரத்தில், அந்த அரசு வன்முறை (State sponsored violence) பற்றிய செய்திகள் வெளி உலகுக்கு பெரிய அளவில் தெரியாத வண்ணம், ஜனநாயகப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது ! டியனமேன் ஸ்கொயரில் ஏற்பட்ட ரத்தக் கறையைக் கழுவ, பல நாட்கள் ஆனது !!!

கீழே உள்ள படம், உலகப் பிரசித்தி பெற்றது. ஒரு தனி மனிதன், 1989-இல் டியனமேன் ஸ்கொயருக்கு விரையும் ராணுவ டாங்குகளை வழி மறிக்கும் காட்சி !

Courtesy: "Jeff Widener (The Associated Press)."

1989-இல் நடந்தது போல, லாசாவில் ஆரம்பித்த போராட்டம், சீனாவின் வேறு இடங்களுக்கு பரவி விடுமோ (அத்தகைய சூழல் இல்லாவிட்டாலும்!) என்ற பேரச்சமே, அமைதியான போராட்டத்தின் மீது சீனாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட்கள் தற்போது கட்டவிழ்த்து விட்ட அராஜக வன்முறைக்குக் காரணம். 1989-இல் ஒரே நாளில் 387 திபெத்தியர்கள் லாசாவில் படுகொலை செய்யப்பட்டபோது, திபெத்தை நிர்வகித்த ஹ¤ ஜின்டோ தான் தற்போதைய சீனக் குடியரசுத் தலைவர் ! கம்யூனிஸம் கொலைகாரர்களை கௌரவித்து அழகு பார்க்கிற லட்சணத்தைப் பாருங்கள் !

தலாய் லாமா தான் வன்முறைக்குக் காரணம் என்று சீன அரசு அப்பட்டமாக புளுகுவதை நம்ப யாரும் தயாராக இல்லை. ஏனெனில், திபெத் சார்ந்த பௌத்த அதிகார மையம் அகிம்சையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஒன்று. அது, சிங்கள அரசு சார்ந்த பௌத்த அதிகார மையம் (ஈழத்தமிழர்கள் மேல் வன்முறையைத் தூண்டுவது) போல ஒருபோதும் செயல்பட விரும்புவதில்லை.

ஜனநாயகத்திலும், மக்களின் அடிப்படை உரிமைகளிலும் நம்பிக்கை கொண்ட நாடுகள் சீனாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸை புறக்கணிக்க வேண்டும். இதில் ஒரு முரண் உள்ளது ! 1984-இல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸை புறக்கணித்த அமெரிக்காவுக்கு அப்போது அவ்வாறு நடந்து கொள்ளவும், காரணம் கூறவும், ஓரளவு தகுதி இருந்தது. இராக்கையும், ஆப்கானிஸ்தானையும் சூறையாடி, ரத்தக்கறை படிந்துள்ள கரங்களுடன் இருக்கும் இன்றைய அமெரிக்காவுக்கு அந்தத் தகுதி நிச்சயம் இல்லை !!

இன்றைக்கு சீன அரசு, திபெத்திய கலகக்காரர்களுக்கு எதிராக ஒரு "மக்கள் போரை" (People's War) தொடுக்க வேண்டும் என்று கூறி வருவது, டிராஜடியிலும் ஒரு காமெடி எனலாம் ! கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த 1949-இல் இருந்து, "மக்கள் போர் என்றால் என்ன?" என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது. ஒரு நூறு/ஆயிரம்/லட்சம்/கோடி நபர்கள் (அல்லது மக்கட்தொகையில் ஒரு 0.5%) சுகபோகங்களுடன், மீதி 99.5% மக்களை அடக்கி ஆளுவது தான் "மக்கள் போர்" போலிருக்கிறது !! மாசேதுங் தொடங்கிய "மக்கள் போர்" மற்றும் "பண்பாட்டுப் புரட்சி"களின் (cultural revolution) விளைவாக, பிணியாலும், பஞ்சத்தாலும், கொடூரமாக கொல்லப்பட்டும், 3 கோடி சீன மக்கள் மாண்டனர் !

சீனாவை எந்தக் காலத்திலும் இந்தியா நம்ப முடியாது / கூடாது என்பது தான் யதார்த்தம். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தவிர்த்து, எந்த ஒர் அரசியல்வியாதியும் (பெரிய அளவில்) சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று புரியவில்லை. அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் (சமயம் கிடைக்கும்போதெல்லாம்) கண்டனம் தெரிவிக்க பாய்ந்தோடி வரும் வலையுலக அறிவுஜீவிகள் தற்போது அமைதி காப்பது ஏன் என்றும் புரியவில்லை !

திபெத்தில் நிலவும் (பின் தங்கிய) பொருளாதாரச் சூழலும், திபெத்திய கலாசாரத்தையும், அடையாளங்களையும் அழிப்பதற்கான சீன அரசின் செயல்பாடுகளும் தான் திபெத்தியர்களின் இந்த எழுச்சிப் போராட்டத்திற்குக் காரணம். மேலும், சீன அரசு என்ன தான் கட்டாயப்படுத்தினாலும், திபெத்திய மக்கள் தலாய் லாமாவை புறக்கணிக்க மாட்டார்கள். திபெத்தியத் துறவிகளும், பொதுமக்களும் தலாய் லாமாவை ஓர் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றுவதை, சீன அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

மேலும், தலாய் லாமா திபெத்தியச் சுதந்திரம் பற்றிப் பேசுவதில்லை. அவர் கேட்பது சீன அரசுக்கு உட்பட்ட திபெத்திய சுயாட்சியே ! சீனா திபெத்துக்கு Tibet Autonomous Region (TAR) என்று பெயரிட்டிருந்தாலும், திபெத்தியர்களுக்கு உரிமையோ, சீனர்களுக்கு நிகரான அந்தஸ்தோ வழங்கவில்லை என்பது கண்கூடு. திபெத்தை நிர்வகிக்க சீன அரசு அனுப்பும் கம்யூனிஸ்ட்கள் செய்யும் தொடர் ஊழலால், 50 ஆண்டுகள் கழிந்தும், திபெத்தில் பொருளாதார முன்னேற்றம் (சீனாவின் பிற மாகாணங்கள் போல) ஏற்படவில்லை. திபெத்திய மக்களின் கோபத்திற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

எ.அ.பாலா

19 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

சந்திப்பு said...

ஜார்ஜ் பெர்னாண்டஸ் தவிர்த்து, எந்த ஒர் அரசியல்வியாதியும் (பெரிய அளவில்) சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று புரியவில்லை.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பா.ஜ.க. ஆட்சியில் இராணுவ அமைச்சராக இருந்தபோது அமெரிக்கா சட்டை - பேண்ட்டையெல்லாம் உருவி சோதனை செய்தபோது இவனுடைய வாய் எதை விழுங்கிக் கொண்டிருந்தது?

enRenRum-anbudan.BALA said...

சந்திப்பு,
வருகைக்கும், (கோபமான) கருத்துக்கும் நன்றி !

சீனா திபெத்தில் செய்யும் அடக்குமுறையைப் பற்றி பேசினால், அமெரிக்கா செய்வது சரி என்று அர்த்தமில்லை !!!

ஜார்ஜ் பெர்னாண்டஸ் தவிர்த்து, பதிவில் உள்ள இன்னும் சில கருத்துகளுக்கு மறுமொழி கூறலாமே ?

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்திக்கு அப்போதே கண்டனம் தெரிவித்திருந்தேன்.

எ.அ.பாலா

said...

பாலா
பீரங்கிகளை மறித்த அந்த இளைஞன் அப்புறம் என்ன ஆனான் எனத் தெரியுமா? எனக்கு என் நண்பனுக்கும் இருக்கும் நெடுநாளைய சந்தேகம் இது!

அன்புடன்
வெங்கட்ரமணன்
(venkatramanan at gmail dot com)

dondu(#11168674346665545885) said...

//1984-இல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸை..//

மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் 1980-ல். பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்கவில்லை. இந்தியா கடைசி முறையாக ஹாக்கி தங்கப் பதக்கம் வென்றது.

1984-ல் லாஸ் ஏஞ்சீல்ஸ் ஒலிம்பிக்கில் சோவியத் யூனியனும் அதன் ஆதரவு நாடுகளும் பங்கேற்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//* 1989-இல் ஒரே நாளில் 387 திபெத்தியர்கள் லாசாவில் படுகொலை செய்யப்பட்டபோது, திபெத்தை நிர்வகித்த ஹ¤ ஜின்டோ தான் தற்போதைய சீனக் குடியரசுத் தலைவர் ! கம்யூனிஸம் கொலைகாரர்களை *//
Only 387 numbers in Tibeth but in Gujarath 3000 muslim people killed in dramtic riot but still Modi is in throne.When compare to BJP govt in Gujarath ,China is good.
Regards Raja.

கல்வெட்டு said...

//ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பா.ஜ.க. ஆட்சியில் இராணுவ அமைச்சராக இருந்தபோது அமெரிக்கா சட்டை - பேண்ட்டையெல்லாம் உருவி சோதனை செய்தபோது இவனுடைய வாய் எதை விழுங்கிக் கொண்டிருந்தது?//

இதெல்லாம் தெரியாதா , சந்திப்பு சார்?

இந்திய கம்யூனிசவாதிகள் , சீனா-திபத், இந்தியா-அருணாச்சலப்பிரதேசம்-திபத் பிரச்சனைகளின் போது என்ன செய்தார்களோ/செய்கிறார்களோ அதையே ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பா.ஜ.க. ஆட்சியில் இராணுவ அமைச்சராக இருந்தபோது (சட்டை - பேண்ட்டையெல்லாம் உருவி சோதனை செய்தபோது) செய்தார்.

அரசியலில் இதெல்லாம் சகஜம்.

சுய கொள்கை இல்லாத வெத்து வேட்டுகள் அமெரிக்காவிற்கோ அல்லது சீனாவிற்கோ அல்லக்கையாக இருக்க வேண்டியதுதான்.

அல்லக்கைகளுக்குள் எதற்கு சண்டை?

ஒருத்தருக்கு அமெரிக்கா என்றால் அடுத்தவருக்கு சீனா விடுங்கள் சந்திப்பு சார்.

கேரளாவுடன் தண்ணீர் பிரச்சனை, கர்நாடகாவுடன் தண்ணீர் பிரச்சனை இதில் எல்லாம் புண்ணாக்கு பொலிட்-பீரொக்கள் இந்திய அளவில் தெளிவான கருத்தை வைக்க முடியாமல், சரத்குமார் ரசிகர் மன்றம் போல் வார்டு அரசியல் பண்ணிக்கொண்டு உள்ளார்கள் காம்ரேடுகள்.

கேவலமாக இல்லை?

பிரச்சனைகள் எல்லாம் நமக்கு எதுக்கு?

அடுத்தவனைத் திட்ட ஒரு வாய்ப்பு இருக்கா, அப்ப அதற்கு மட்டும் பதில் போடுவோம். சரியா? அதுதானே நமது அரசியல் பாலபாடம்.


***

பாலா,
இந்தியா எந்த அயல்நாட்டு விசயத்தில் தெளிவான கொள்கைமுடிவை எடுத்துள்ளது?

அருணாச்சலப் பிரதேசத்திற்கு பிரதமர் போனபோது சீனா செய்த கோமாளித்தனத்திற்கு , சும்மா வேடிக்கை பார்த்தது. ஆனால்,யாரோ சிலர், இந்தியாவில் உள்ள சீனா தூதரகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு , சீனாவில் இந்திய தூதரின் டவுசரைக் கழட்டுகிறார்கள்.

காம்ரேடுகளுக்கும் , பா.ஜா.க/ காங்கிரஸ் கட்சிக்கும் அமெரிக்கா-சீனா தவிர இந்திய அளவில் என்னெ வேறுபாடு உள்ளது?

&**%^%@$^*)((^%&()))))!!@$#%^&(*%$$^*))_(^#*((*&^%&**&^%%^%^

சந்திப்பு said...

பாலா திபெத் சீனாவின் அங்கமே என இதே பா.ஜ.க. மந்திரி சபைதான் ஆதரித்தது. அப்போதும் இந்த மண்ணாங்கட்டி பெர்ணாண்டஸ் இராணுவ அமைச்சர்தான். ஆட்சியில் உள்ளபோது ஒரு பேச்சு ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு... இதுதான் சங்பரிவார இரட்டை முகம்.

மேலும் 1962களில் திபெத் பிரச்சினை முன்னுக்கு வந்தபோது சி.ஐ.ஏ. ஆதரவுடன் தலாய்லாமா அமெரிக்க ஆயுதங்களை சீனாவுக்கு எதிராக இந்தியா மூலமாக கொண்டுச் சென்றதெல்லாம் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. எனவே தலாய் லாமா ஒரு சி.ஐ.ஏ. கைக்கூலி. சீனாவுக்கு எதிராக கலகம் செய்வதுதான் தலாய்லாமா பாணி...

அது சரி. திபெத் பிரச்சினை உள்நாட்டு விசயம் சம்பந்தப்பட்டது. அதனை அந்த நாடுதான் தீர்க்க வேண்டும்.

ஏன் நம்முடைய இந்தியாவில் குஜராத்தில் கூட 2000 இசுலாமியர்கள் பா.ஜ.க. மத்தியிலும் - மோடி மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது நரவேட்டையாடப்பட்டனர். கர்ப்பிணி பெண்கள் கூட கண்ட துண்டமாக வெட்டப்பட்டனர். இதற்காக உலகில் உள்ள இசுலாமிய நாடுகள் எல்லாம் இந்தியா மீது படையெடுக்க வேண்டும் என்றால் நீங்கள் அதனை ஆதரிப்பீர்களா?

மனித உரிமை குஜராத்தில் இன்றைக்கும் என்ன பாடு படுகிறது. சந்திரமோகன் என்ற மாணவன் ஓவியக் கல்லுரி மாணவன் அடித்து துவைக்கப்படவில்லையா? இது மனித உரிமை மீறல் அல்லவா? இந்திய நாட்டின் ஜனநாயக - மதச்சார்பற்ற - சுதந்திர - பேச்சுரிமை - எழுத்துரிமையின் மீதான தாக்குதல் இல்லையா? இதன் மீதெல்லாம் உங்கள் கோபம் என்ன?

காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று உரிமை கோருகிறார்கள். இன்னும் சிலர் சுதந்திர காஷ்மீர் சேவண்டும் என்கிறார்கள்? வடகிழக்கு மாநிலங்களில் அசாம். மேகலாயா. மணிப்பூர் உட்பட கலக குரல் கேட்கிறது. இந்தியாவிலிருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. அதற்காக துண்டித்து விடலாமா? அவர்களுக்கு சுதந்திர வழங்கி விடலாமா? உங்கள் கருத்து என்ன - பார்வை என்ன?

ஒரு பிரச்சினையின் மீது கருத்து சொல்வது என்பது நமக்கு இருக்கும் உரிமை? ஆனால் கருத்து திணிப்பு கூடாது. அமெரிக்காவை நம்பும் ஏமாளிகள்தான் நமது நாட்டில் அதிகம் சீனாவை எப்போதும் எதிரியாகவே சித்தரிப்பது யாருடைய நலன் காப்பதற்கு? அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு மாறாக. பகைமை துண்டுவதும் கசாப்பு கடை நடத்தும் அமெரிக்காவின் சுதந்திர காற்றை சுவாசிப்பதும் முரண்பாடாக தெரியவில்லையா? அமெரிக்கா ஈராக்கில் என்ன தோட்டப் பராமரிப்பு வேலை செய்யவா சென்றிருக்கிறது? 10 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ார்கள். 5 லட்சம் குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள்? இது மனித உரிமை மீறல் இல்லையா?.... என்ன பாலிடிக்ஸ்பா உங்களது!

dondu(#11168674346665545885) said...

//பீரங்கிகளை மறித்த அந்த இளைஞன் அப்புறம் என்ன ஆனான் எனத் தெரியுமா? எனக்கு என் நண்பனுக்கும் இருக்கும் நெடுநாளைய சந்தேகம் இது!//
படுகொலை செய்யப்பட்ட எண்ணற்ற போராட்டக்காரர்களில் அந்த இளைஞனும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நடுநிசியில் எழுப்பினால் காலையில்தான் வருவேன் என்று ஒரு தூதர் சொல்லவும் பயந்தார் என்றால் அவரால் இந்தியாவுக்கு அவமானமே. அவரை உடனே போகச் சொல்லி நம் வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தால் அவர்கள் முக்காடு போட்டு உட்கார வேண்டியவர்களே. 1962 யுத்தத்தில் சீனர்களுக்கு எதிராக துப்பாக்கி சுடக்கூடாது என்று உத்தரவிட்டவர்கள்தானே இந்திய சேனையின் தலைமை.

நம் அரசுக்கு யாராவது சுயமரியாதை பற்றி பாடம் எடுப்பது நலம். இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்க வேண்டிய அனேக விஷயங்களில் இதுவும் அடங்கும்.

இவர்கள் போதாது என்று என்று கம்யூனிஸ்ட் தேச துரோகிகளும் சீனாவுக்கு சப்பைக்கட்டு கட்டுவது விசனத்துக்குரியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Santhosh said...

http://santhoshpakkangal.blogspot.com/2008/03/blog-post.html

சரியா சொல்லி இருக்கீங்க பாலா, ஆனாலும் இந்த விஷயத்துல நான் தான் பஸ்டூ.. :))

enRenRum-anbudan.BALA said...

வெங்கட்ரமணன்,
வருகைக்கு நன்றி. அந்த இளைஞன் என்ன ஆனான் என்று தெளிவாக விவரங்கள் இல்லை.

அந்த "Tank Man" குறித்து விக்கிபீடியாவில் பாருங்கள், லிங்க் கீழே:
http://en.wikipedia.org/wiki/Tank_man
அந்த பக்கத்தில் சுட்டப்பட்டுள்ள பிற பக்கங்களையும் வாசித்துப் பார்க்கவும்.
http://www.time.com/time/time100/leaders/profile/rebel.html
எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

//மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் 1980-ல். பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்கவில்லை. இந்தியா கடைசி முறையாக ஹாக்கி தங்கப் பதக்கம் வென்றது.
//
Raghavan Sir, Thanks for pointing out the error !

//
Only 387 numbers in Tibeth but in Gujarath 3000 muslim people killed in dramtic riot but still Modi is in throne.When compare to BJP govt in Gujarath ,China is good.
Regards Raja.
//
when the topic is about oppression in Tibet, kindly give your views on this topic. For your information, I never defended Modi for the riots.

Also, Modi came to power (democratically) dulu elected by the majority of people of Gujarat, whereas there is no democratic rule in China. The communists elect themselves to power !!!

enRenRum-anbudan.BALA said...

I will respond to other comments TOMORROW !

said...

.//இந்தியா எந்த அயல்நாட்டு விசயத்தில் தெளிவான கொள்கைமுடிவை எடுத்துள்ளது?

அருணாச்சலப் பிரதேசத்திற்கு பிரதமர் போனபோது சீனா செய்த கோமாளித்தனத்திற்கு , சும்மா வேடிக்கை பார்த்தது. ஆனால்,யாரோ சிலர், இந்தியாவில் உள்ள சீனா தூதரகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு , சீனாவில் இந்திய தூதரின் டவுசரைக் கழட்டுகிறார்கள்.
//
:((((

enRenRum-anbudan.BALA said...

******************************
கல்வெட்டு,
கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறுவது போல நம்மிடம் தெளிவான (சுயேச்சையான) வெளிநாட்டுக்
கொள்கை எந்த காலத்திலும் கிடையாது.
***************************
சந்திப்பு,
தலாய் லாமா சி.ஐ.ஏ கைக்கூலி என்று சீனா பரப்பிய பொய்களை நம்பத் தான் ஆளில்லை!

//அது சரி. திபெத் பிரச்சினை உள்நாட்டு விசயம் சம்பந்தப்பட்டது. அதனை அந்த நாடுதான் தீர்க்க
வேண்டும்.
//
Gross Human Rights Violations உள்நாட்டுப் பிரச்சினை கிடையாது. அவற்றுக்கு எதிராக
யார் வேண்டுமானாலும் குரல் எழுப்பலாம்.

//காஷ்மீர் பாகிஸ்தானுக்கு செதந்தம் என்று உரிமை கோருகிறார்கள். இன்னும் சிலர் சுதந்திர காஷ்மீர்
சேவண்டும் என்கிறார்கள்? வடகிழக்கு மாநிலங்களில் அசாம். மேகலாயா. மணிப்பூர் உட்பட கலக
குரல் கேட்கிறது. இந்தியாவிலிருந்து துண்டித்துக் கெதள்ள வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது.
அதற்காக துண்டித்து விடலாமா? அவர்களுக்கு சுதந்திர வழங்கி விடலாமா? உங்கள் கருத்து என்ன -
பார்வை என்ன?
//

மேலும், ஒருவர் ஒரு பதிவில் ஒரு பிரச்சினை குறித்துப் பேசினால், உடனே "இந்த விஷயத்தில்
உங்கள் கருத்து என்ன ? அந்த விஷயத்தில் உங்கள் பார்வை என்ன?" என்று விதண்டாவாதம்
செய்தால், பதிவின் நோக்கம் திசை திரும்பி விடும் இல்லையா ? மேலும், திபெத் சுதந்திரம் பற்றி
யார் பேசியது ??? திபெத்தியர்களின் உரிமை பற்றித் தான் பேச்சே !

//
ஏன் நம்முடைய இந்தியாவில் குஜராத்தில் கூட 2000 இசுலாமியர்கள் பா.ஜ.க. மத்தியிலும் - மோடி
மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது நரவேட்டையாடப்பட்டனர்.
//
மோடி மற்றும் குஜராத் வன்முறை பற்றிய எனது கருத்துகள் என் வலைப்பதிவில் உள்ளது. வாசித்துக்
கொள்ளவும் !
//
அமெரிக்கா ஈராக்கில் என்ன தேதட்டப் பராமரிப்பு வேலை செய்யவா சென்றிருக்கிறது? 10 லட்சம்
மக்கள் படுகெதலை செய்யப்பட்டுள்தர்கள். 5 லட்சம் குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள்? இது மனித
உரிமை மீறல் இல்லையா?.... என்ன பாலிடிக்ஸ்பா உங்களது!
//
ஈராக் விஷயத்தில், அமெரிக்காவை கண்டித்தும் எழுதியுள்ளேன். மேலும், இப்பதிவில் எந்த கருத்துத்
திணிப்பும் நான் செய்யவில்லை ! நிலைமையை விமர்சனம் செய்துள்ளேன்.
*********************

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார்,
நமது அரசுக்கு சிறிதேனும் சுயகௌரவம் இருந்தால், சீனர்களிடம் மன்னிப்பு கேட்க நடுநிசியில்
விழுந்தடித்துக் கொண்டு ஓடியிருக்க மாட்டோம் :(
****************

சந்தோஷ்,
//சரியா சொல்லி இருக்கீங்க பாலா, ஆனாலும் இந்த விஷயத்துல நான் தான் பஸ்டூ.. :))
//
வருகைக்கு நன்றி. நீங்களே பர்ஸ்டா இருந்துட்டுப் போங்களேன், எனக்கு சந்தோஷமே :)
உங்கள் பதிவு பற்றி நண்பர் சங்கர் தொலைபேசியில் கூறினார், நீங்கள் கமெண்ட் போடறதுக்கு
முன்னமே வாசித்து விட்டேன் !!!

எ.அ.பாலா

தறுதலை said...

என்னமா பொங்கி பின்னி பெடலெடுத்திருக்கீங்க!
பக்கத்துல பார்த்தீங்க்ன்னா ஈழத்துலயும் சிங்கள அரசு நடத்துற கொடுமை தெரியும்.

சீனாவின் திபெத்திய அடக்கு முறைகளுக்கு என் கண்டணங்கள்
இந்தியாவின் காஸ்மீர் அடக்கு முறைகளுக்கு என் கண்டணங்கள்
சிங்கள அரசின் ஈழ அடக்கு முறைகளுக்கு என் கண்டணங்கள்


--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

enRenRum-anbudan.BALA said...

நன்றி, தறுதலை அவர்களே !

Expatguru said...

Very balanced and well-written article, Bala. The so-called civilized world does not seem to pay attention to the suffering in Tibet. Maybe things would have been different if there was oil in Tibet?

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails